கமலின் ஹேராம் படத்தின் வசூல் என்ன தெரியுமா.!

ஹேராம் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை

By ragi | Published: May 01, 2020 10:54 AM

ஹேராம் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்த காலகட்டத்தில் ஏற்றப்படமாக தற்போது பாராட்டி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் நடித்து 2000-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் "ஹேராம்". இப்படத்தில் ஷாரூக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி, வசுந்த்ரா தாஸ், அதுல் குல்கர்னி உட்பட பலர் நடித்தனர். இளையராஜா  இப்படத்தின் இசையமைத்திருந்தார். இப்படம் காந்தியைக் கொன்ற சம்பவத்தின் பின்னணி பற்றியும், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தை பற்றியும் கூறியதால் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மேலும், இந்த படம் நிறைய பிரச்சினையை கிளப்பி விட்டாலும் கமல் அவர்களின் இயக்கம் குறித்து இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது .

இப்படம் அப்போது  ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்த காலகட்டத்தில் ஏற்றப்படமாக தற்போது பாராட்டி வருகின்றனர். இந்த படம் அப்போதே ரூ. 11 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc