ஆண்களை விட பெண்களே அதிகமாக இணையதள சேவைகளை பயன்படுத்துகின்றனர்.. ஐஆர்எஸ் வெளியிட்ட அறிக்கை!

கிராமப்புறங்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இணையதளத்தை பயன்படுத்துவதாக ஐ.ஆர்.எஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விரிவான ஆய்வறிக்கையை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, இந்தியாவில் மொத்தம் 135.26 கோடி மக்கள் வசிக்கின்றனர். அதில் 50.4 கோடி மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இதில் நகர்புறத்தில் வசிக்கும் மக்கள் இணையத்தில் அதிகமாக நேரத்தை செலவிடுகின்றனர்.

இந்நிலையில், 2019 நவம்பர்க்குள் புதிதாய் 2.6 கோடி பெண் இணைய பயனாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் பயனர்கள் 9 சதவீதமே உயர்ந்திருக்கும் நிலையில், பெண்கள் 21 சதவீதம் அதிகரித்துள்ளனர். பெண்கள் மத்தியில் இணையம் வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே கிராமப்புற இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிகமாக இணையத்தை பயன்படுத்துகின்றனர் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.