பெண்கள் பாலியல் தொல்லைகள் குறித்து வெளியில் தைரியமாக பேச வேண்டும் : நடிகை ராய் லட்சுமி

By

நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் சென்னையில் நடைபெற்ற சிகை அலங்கார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் இவர்  சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நாட்டின் முக்கிய பிரச்சனையாக பாலியல் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், நடிகர் சங்கம் பாலியல் தொல்லை போன்ற பிரச்சனைகளில் உதவியுள்ளதாகவும், பெண்கள் பாலியல் தொல்லை குறித்து, வெளியில் தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மீடூ புகாரில், திரைத்துறை பெண்கள் மட்டுமன்றி பல, இந்தியாவில் உள்ள பல பெண்கள் பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023