பெண்களே ஆண்களை விட சிறப்பாக வாகனம் ஓட்டுகின்றனர்…! ஆய்வில் வெளியான தகவல்…!

ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவாகவே விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர். பெண்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக கையாளுகின்றனர்.

அமீரகத்தை பொறுத்தவரையில், ஆண், பெண் இருவருமே சொந்தமாக வாகனம் வைத்திருப்பதுண்டு. இந்நிலையில், இதுகுறித்து வெளியான ஆய்வு ஒன்றில், ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவாகவே விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர். பெண்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக கையாளுகின்றனர். குழந்தைகளை ஏற்றி செல்லும் போது, சீட் பெல்ட் அணிந்து செல்கின்றனர்.

பெண்கள் பாதுகாப்பான முறையில் வாகனம் ஒட்டி செல்வதில் கவனம் செலுத்துவதாகவும், கடந்த ஆண்டில் ஏற்பட்ட விபத்தில், ஆண்கள் 26%-மும், பெண்கள் 21%-மும் விபத்துக்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் சாலை விபத்து ஏற்படுத்தியதில், பெண்கள் குறைவாகவே விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர்.

வாகனங்களை ஒட்டி செல்லும் போது, சீட் பெல்ட்டை பெண்கள் 94 சதவீதமும், ஆண்கள் 91 சதவீதமும் கவனம் செலுத்துவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.