நாடு முழுவதும் உள்ள புராதன இடங்களை பெண்கள் இலவசமாக சென்று பார்க்கலாம் – மத்திய அரசு

மார்ச் 8ம் தேதி நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டப்படவுள்ளது. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து தனக்கான உரிமைகளை வென்றெடுத்து சாதித்த நாள் தான் மகளிர் தினம். இதனை 1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்துகொண்டு சர்வேதேச மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள புராதன இடங்களை நாளை பெண்கள் இலவசமாக சென்று பார்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பார்க்க மகளிர்தினத்தையொட்டி கலாச்சாரத்துறை அமைச்சகம் சலுகை அறிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்