5 ஆண்களால் சித்திரவதை செய்யப்பட்ட பெண்,குற்றவாளிகளின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார்…!

அசாமில் ஒரு சிறுமியை ஐந்து ஆண்கள் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து தகவல் அளிப்பவர்களுக்கு தகுந்த வெகுமதி அளிக்கப்படும் என அசாம் காவல்துறை அறிவிப்பு.

அசாமில் ஒரு சிறுமியை ஐந்து ஆண்கள் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அடையாளம் தெரியாத 5 ஆண்கள் ஒரு சிறுமியை அடித்து சித்திரவதை செய்கின்றனர்.

இந்த சம்பவம் எங்கு நடந்தது, எப்போது நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள 5 குற்றவாளிகளின் புகை படங்களையும் அசாம் காவல்துறை வெளியிட்டுள்ளது.

மேலும், பொதுமக்களிடம் இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு இந்த குற்றவாளிகளைப் பற்றிய ஏதேனும் தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அசாம் காவல்துறை ட்வீட்டர்  பக்கத்தில், 5 குற்றவாளிகளின் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த குற்றவாளிகள் ஒரு வைரல் வீடியோவில் ஒரு பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்வதையும் எல்லைமீறி நடப்பதையும் காணலாம்.

இந்த சம்பவ நடந்த நேரம் மற்றும் இடம் குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால் குற்றம் தொடர்பான தகவல்கள் அல்லது குற்றவாளிகளின் எவரையும் கண்டறிந்து எங்களை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் ராபின் ஹிபு கூறுகையில், நாங்கள் குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சிக்கிறோம். போலீசார் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.