டன்டேவாடாவில் துப்பாக்கி சூட்டில் பெண் நக்சலைட் என்கவுண்டர்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் டன்டேவாடா மாவட்டத்தில் பெண் நக்சலைட் ஒருவரை அங்குள்ள பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்ட் அபிஷேக் பல்லவா கூறுகையில், கெய்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குமல்நார் கிராமத்தின் அருகில் காலை 6.30 மணியளவில் நக்சல்களுடன் மாவட்ட ரிசர்வ் காவல்துறையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இந்த துப்பாக்கி சண்டையில் குண்டுகளை மாற்றும் அந்த குறுகிய நேரத்தில் நக்சலைட்டுக்கள் தப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 400 கி.மீ. தொலைவில் ஒரு சடலம் கிடைத்ததாகவும், அது பெண் நக்சல் வைக்கோ பெக்கோ என்றும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார். 24 வயதாகும் இந்த பெண் நக்சல் அண்டை மாவட்டமான பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பைரம்கர் பகுதியை சேர்ந்த கிளர்ச்சியாளர் என்றும், மாவோயிஸ்டுகளின் பி.எல்.ஜி.ஏ. பிரிவின் 16 ஆவது உறுப்பினர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த நக்சல் தலையில் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்து சென்றுள்ளார். அதில், நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள், 2 கிலோ எடையுள்ள வெடிக்கும் சாதனம்(ஐ,இ,டி), மருந்துகள், மாவோயிஸ்ட் பொருள்கள், அன்றாட உபகரணங்கள் ஆகியவை என்கவுண்டர் இடத்தில் கிடைத்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.