டெல்லியில் தூசிப் புயலில் பறந்து வந்த தகரம் வெட்டியதில் பெண் உயிரிழப்பு!

டெல்லியில் ஏற்பட்டுள்ள தூசி புயலின் காரணமாக நடந்து வந்து கொண்டிருந்த பெண் மீது தகரம் வந்து விழுந்ததில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் தற்போது பல்வேறு இடங்களிலும் மிக அதிகமான தூசிப் புயல் வீசி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தனது மகளுடன் 37 வயதுடைய சோனு கட்டாரியா எனும் பெண்மணி சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து காற்றின் வேகத்தில் பறந்து வந்த தகரம் நடந்து சென்று கொண்டிருந்த சோனுவின் தொண்டையை அறுத்துள்ளது. மேலும் அவருடன் வந்த அவரது 9 வயது மகள் நிகிதா மீதும் அந்த தகரம் விழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் மீதும் இந்த தகரம் விழுந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே சோனு கழுத்தில் காயம் பட்டதால் உயிரிழந்துள்ளார். அவரது மகள் நிகிதா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. சைக்கிளில் சென்ற நபருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்பொழுது மோசமான வானிலை நிலவுவதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். சோனுவுக்கு இரண்டு மகள்கள் உள்ளதாகவும் அவரது கணவரும் மகளும் ஜோத்பூரில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal