மாஸ்க் இல்லையென்றால், வாக்களிக்க முடியாது – ஆணையர் பிரகாஷ்

வாக்களிப்பவர்கள் மாஸ்க் இல்லாமல் சென்றால் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் தங்களது பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில். கொரோனா அதிகரிப்பின் காரணமாக அதிகாரிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள், இது குறித்து கூறுகையில். வாக்களிப்பவர்கள் மாஸ்க் இல்லாமல் சென்றால் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், முககவசம் இல்லாமல் வருபவர்களுக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் முககவசம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.