பைக் வாங்கி தராததால் திருமணமான 24 மணிநேரத்தில் விவாகரத்து செய்த புதுமாப்பிள்ளை!

பைக் வாங்கி தராததால் திருமணமான 24 மணிநேரத்தில் விவாகரத்து செய்த புதுமாப்பிள்ளை!

வரதட்சணை தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட்ட பிறகு பல திருமணங்கள் பிரச்சனை இன்றி முடிவடைந்து வருகின்றன.  இருந்தும் அவ்வப்போது இந்த வரதட்சணை பிரச்சனை பெண்களின் திருமண வாழ்க்கையை வெகுவாக பாதித்து வருகிறது.

இந்த சம்பவம் நடைபெற்றது உத்திர பிரதேசத்தில் உள்ள ஜெகன்கிராபாத் என்ற ஊரில் அரங்கேறியுள்ளது. அந்த ஊரை சேர்ந்த ஷாஹே ஆலம் என்பவர் ருக்ஷனா என்ற பெண்ணை ஜூலை 13ஆம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் ஆனது.

பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு இருசக்கர வாகனம் வாங்கித்தருவதாக கூறியிருந்தார்களாம், ஆனால், சொன்னபடி வாங்கித்தராததால் திருமணமான 24 மணி நேரத்தில் முத்தலாக் முறைப்படி விவாகரத்து செய்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரை பதிவு செய்து 12 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube