அரசு அலுவலகங்களில் 30% பணியாளர்களுடனும்; சார்பதிவாளர் அலுவலகங்களில் 50% பத்திரப் பதிவுகளுடனும் இயங்க அனுமதி…!

0
87
13 / 100
  • அரசு அலுவலகங்கள் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
  • சார்பதிவாளர் அலுவலகங்களில் 50 சதவிகிதம் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதி

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த,கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கானது வரும் ஜூன் 7 ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில்,வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • அதன்படி,ஜூன் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி காலை 6-00 மணி வரை,தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • மேலும்,தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு,பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.