பிக்பாஸ் டைட்டில் வின்னரின் தந்தை மாரடைப்பால் திடீர் மரணம்.!

  • பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக இவர்தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட முகேன் ராவ் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
  • முகேன் ராவின் அப்பா பிரகாஷ் ராவ் நேற்று மாலை 6 மணிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார்.

கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக இவர்தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதேபோல் முகேன் ராவ் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேன் ராவ் அனைத்து டாஸ்க்குகளை சரியாக செய்தது மட்டுமல்லாமல், சக போட்டியாளர்களுடன் பாசத்துடன் பழகியது, பாடல் பாடி கலகலப்பாக வைத்திருந்தது போன்றவை அவருக்கு கூடுதல் ரசிகர்களை பெற்றுத்தந்தது.

மேலும், அவர் நிகழ்ச்சியில் அவர் பாடிய சத்தியமா நான் சொல்லுறேன்டி என்ற பாடல் மிகப் பெரிய ஹிட் அடித்தது. பிக்பாஸ்க்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ரசிகர்கள் அவரை இந்த பாடலை பாடச் சொல்லி கேட்டு ரசித்தனர். இந்த நிலையில், முகேன் ராவின் தந்தை பிரகாஷ் ராவ் நேற்று மாலை 6 மணிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் முகேன் ராவின் தந்தையின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்