வீடு தேடி வரும் மது .! பஞ்சாப் அரசு அதிரடி.!

பஞ்சாப்பில் மதுபானகளை home delivery சேவைக்கு அம்மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24 -ம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து ,கொரோனா பாதிப்பால்  40 நாள்களாக மூடப்பட்ட  மதுக்கடையை திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது.

இதனால், டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற  பல மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில்  நாளை முதல் டாஸ்மாக் கடைகள்  திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப்பிலும் நாளை முதல் மதுபான கடையை திறக்க அம்மாநில  அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு நேரங்களில் மட்டுமே மதுபான கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு இரண்டு லிட்டருக்கு மேல் மதுபானம் வழங்க அனுமதிக்கப்படாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப்பில் மதுபானகளை home delivery சேவைக்கு அம்மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது.

author avatar
Dinasuvadu desk