தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்கள் அதிகரிப்பா? – மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகள் ஆலோசனை!!

இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஏற்கனவே உள்ள இரவுநேர ஊரடங்கு நேரம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டவது அலை வேகமாக பரவி வருவதால் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. எனினும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வருவதால், தமிழகத்தில் முழு ஊரடங்கை வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து திங்கட்கிழமை காலை வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகள் வர வாய்ப்பு உள்ளது. முழு பொது முடக்கமாக அல்லாமல் பணிநேரம் குறைப்பு, பணியாட்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். தமிழகத்தில் மாதவழிபாட்டு தளங்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, கூட்டம் அதிகமாக உள்ள வாரச்சந்தைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படக்கூடும். வீட்டிலிருந்தே பணியாற்றுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்படலாம். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க உயர் அதிகாரிகள் இன்று  ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர். புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை இன்று மாலை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.