பொதுமுடக்கம் நீடிப்பா? அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

நான்காம் கட்ட பொதுமுடக்கம் வரும் 31 ஆம் தேதி முடிவடையும் நிலையில், பிரதமர்

By surya | Published: May 29, 2020 01:01 PM

நான்காம் கட்ட பொதுமுடக்கம் வரும் 31 ஆம் தேதி முடிவடையும் நிலையில், பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நான்காம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தற்பொழுது இது நாளை மறுநாள் (மே 31) ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கை நீடிப்பதை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிச்சாமி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

Step2: Place in ads Display sections

unicc