புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு செல்லுமா #RCB…?

இன்றயை ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.

இன்று ஐபிஎல் தொடரின் 48 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதைபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் 11 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் பெங்களுர் அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து விடும்.

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை 26 போட்டிகள் நேருக்கு நேர் மோதியதில் மும்பை அணி 16 முறையும் பெங்களூர் அணி 10 முறையும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.