பொதுக்கூட்டத்தில் ஓவைசி பங்கேற்பா? திமுக தலைமை விளக்கம்

பொதுக்கூட்டத்தில் ஓவைசி பங்கேற்பா? திமுக தலைமை விளக்கம்

திமுகவின் “இதயங்களை இணைப்போம்” மாநாட்டில் அசாதுதீன் ஓவைசி பங்கேற்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 6-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதயங்களை இணைப்போம் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், திமுக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது.ஆகவே திமுக நடத்தும் இதயங்களை இணைப்போம் மாநாட்டுக்கு AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.இந்நிலையில் இதற்கு திமுக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச்செயலாளர் மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பில் எங்கள் கழகத் தலைவரை வைத்து பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கமான ஒன்று. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு அப்படியொரு கூட்டம், வருகின்ற 6.1.2021 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கழகத் தலைவர் அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது.இந்தப் பொதுக்கூட்டத்திற்கு எப்போதும் போல் தி.மு.க.வின் தோழமை கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி தொலைக்காட்சிகளில் வருவது போன்ற செய்தி உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube