#Breaking:தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பா? – 7 பேரின் மாதிரிகள் ஆய்வு!

சென்னை:நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,அது ஒமிக்ரான் தொற்று பாதிப்பா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும்,அவருடன் தொடர்புடைய 6 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்துள்ள ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றனாது,உலகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா,கர்நாடகாவில் பரவிய நிலையில் இதுவரை நாடு முழுவதும் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும்,ஒமிக்ரான் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் இருந்தது.

இந்நிலையில், நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,அது ஒமிக்ரான் தொற்று பாதிப்பா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும்,நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த நபரோடு தொடர்புடைய மேலும் 6 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும்,இதற்காக இவர்கள் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மேலும்,அவர்கள் 7 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உள்ளதா? என்பதை அறிய அவர்களது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்,அதன் முடிவுகள் இன்று அல்லது நாளை தெரிய வரும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.