கமல்ஹாசனுக்காக வழிவிட்ட நம்ம அண்ணாச்சி.! இல்லைனா என்னாகி இருக்குமோ.?!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு, படத்தின் ட்ரெய்லர் & இசை வெளியீட்டு விழா வரும் 15-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. கமல்ஹாசன் படத்தின் விழா என்பதால், இந்த விழாவிற்கு பல சினிமா பிரபலங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மேலும் ஒரு புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், விக்ரம் இசை வெளியீட்டு விழா நடைபெறும் அதே தேதியில், அதே அரங்கில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள “தி லெஜண்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்ததாம்.

ஆனால், கமல்ஹாசனின் விக்ரம் பட இசைவெளியீட்டு விழா அங்கு நடைபெற இருப்பதற்கான தகவல் தி லெஜண் படக்குழுவிற்கு தெரிய வந்தவுடன், படக்குழுவினர் தேதியை மாற்றிவிட்டனராம். ஒருவேளை லெஜண்ட் படக்குழுவினர் நேரு ஸ்டேடியத்தை முன்னாடியே படக்குழு புக் செய்து வைத்திருந்தால், விக்ரம் படக்குழு இசைவெளியீட்டை நடத்த திண்டாடித்தான் இருக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.