விஜய்-67 படத்தில் வில்லனாகிறாரா இந்தி நடிகர் சஞ்சய் தத்..?!

Sanjay Dutt

அண்மையில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக விஜய் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, சரத்குமார் மற்றும் ஷாம் ஆகிய பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை அடுத்து விஜயின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என பல மொழிகளில் உருவாக்கவுள்ள இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பதற்கு பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சஞ்சய் தத் விஜயுடன் இணைந்து நடித்தால் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.