3 நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வருமா? – நிபுணர் குழு ஆய்வு

கொரோனா தடுப்பூசி அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு 3 நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி ஒத்திகை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகர் மற்றும் சில மாவட்டங்களை தேர்வு செய்து, ஜனவரி 2ம் தேதி நாளை முதல் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.

இந்நிலையில், இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின், சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஆகிய 3 நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்த 3 நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வருமா? என்று டெல்லியில் இன்று மீண்டும் நிபுணர் குழு ஆய்வு செய்கிறது. அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு 3 நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்