வரலாற்றில் இன்று(27.03.2020)…. எக்ஸ்-ரேவை கண்டுபிடித்த இயற்பியல் அறிஞர் பிறந்த தினம்…

இயற்பியல் அறிஞர் ராண்ட்ஜென் ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் 1845ல் மார்ச் மாதம் 27ஆம் நாள் அதாவது இன்று பிறந்தார். இவர், இளம் வயதிலேயே  அறிவியலின் மீது தீராத ஆர்வம் கொண்ட காரணத்தால்  மெக்கானிக்கல் இன்ஜினியரிங்  பிரிவை தேர்ந்தேடுத்துப் படித்தார் .பின், அவர்  ஜெர்மனியில் உள்ள  பல்வேறு பல்கலைகழங்களில் வேலைபார்த்த அவர், அமெரிக்காவின் ஐயோவா பல்கலைகழகத்திற்கு பேராசிரியர் பணி செய்ய டிக்கெட் எல்லாம் எடுத்து கிளம்பும் பொழுது ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது, உலகப்போர் வந்து விட்டதால் அந்த வாய்ப்பு நழுவி அவர், ஜெர்மனியிலேயே இருந்துவிட்டார் . பின், ஒர் ஆராய்ச்சிய்யின் போது, பேரியம் பிளாடினோ சயனைட் என்ற வேதிப்பொருள்  பூச்சு பூசிய திரை,மற்றும் க்ரூக்ஸ் குழாய் ஆகியவற்றை கருப்பு கார்ட்போர்டில் சுற்றி வைத்துக்கொண்டு கேதோட் கதிர்களை பற்றி ஆய்வு செய்கிற பொழுது திரையில் அங்கு மங்கலான பச்சை ஒளிரலை அவர் கண்டார்.  அதற்கு காரணமான அந்த கதிரை எக்ஸ் கதிர் என அழைத்தார் . ஏனென்றால் அந்த கதிரின் பண்புகள் குறித்து அவர் அறியாததால் அவர் அப்படி அழைத்தார். மேலும் அந்த கதிர்கள் புத்தகங்கள் ,வழியாகவும் மனித உடல்களின் வழியாகவும் கடந்து போவதை ஆராய்ச்சிய்யின் போது அவர் கண்டார்.

ராண்ட்ஜன்க்கான பட முடிவுகள்

நடுவில் இந்த கதிர்களின் மீது தன் மனைவியின் கைபட்டு அவரின் எலும்புகள் அப்படியே திரையில் பதிவான  பொழுதுதான் எலும்புகளை கடந்து எக்ஸ் கதிர்கள் செல்லாது என்பதும் அதைக்கொண்டு  குண்டுகள், ஏதேனும் குறைகள் மற்றும் எலும்பு முறிவுகள் இருப்பின்  கண்டறிய இந்த கதிர்களை பயன்படுத்தலாம் என உணர்ந்து அதை செயல்படுத்தினார் . இந்த அரிய தனது  கண்டுபிடிப்புகளை அவர் காப்புரிமை செய்யவில்லை . இதை மனித குலத்துக்கே அவை பயன்படட்டும் என உறுதியாக இருந்தார் . இந்த கண்டுபிடிப்புக்காக இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. இதில் கிடைத்த பரிசு தொகை அனைத்தையும் அவர் அப்படியே தனது பல்கலைகழகத்திற்கே நன்கொடையாக வளங்கினார். இத்தகைய சிறந்த மனிதர் இந்த பூமியில் அவதரித்த தினம் வரலாற்றில் இன்று. 

author avatar
Kaliraj