மனைவிக்கு வித்தியாசமான கேக்கை (Amazon Cake) பரிசளித்த கணவர்!நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

மனைவிக்கு வித்தியாசமான கேக்கை (Amazon Cake) பரிசளித்த கணவர்!நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

அமெரிக்காவில்  வடக்கு கரோலினா சார்ந்தவர் மெக்கொயர்  இவர் தன் மனைவியின் பிறந்த நாளுக்கு வித்தியாசமான முறையில் பரிசு அளிக்கவேண்டும் என எண்ணினார்.அதற்காக தன் மனைவிக்கு பிடித்த ஒன்றை கேக் வடிவில் செய்து கொடுக்கலாம் என அவர் முடிவு செய்தார்.

டைமெண்ட் ,பூக்கள் , பொம்மை போன்ற வடிவில் கேக் செய்து கொடுத்து இருப்பார் என எண்ணினோம். ஆனால் மெக்கொயர்  சற்று வித்தியாசமாக யோசித்து அமேசான் டெலிவரி பாக்ஸ் வடிவில் கேக் ஒன்றை ஆர்டர் செய்து கொடுத்து உள்ளார்.

அந்த கேக்கை முதல் முதலில்  மனைவி எமிலி பார்க்கும் போது அவரையே அறியாமல் சிரித்து விட்டாராம். முதல் முறையாக பார்க்கும் போது இது உண்மையான அமேசான் டெலிவரி பாக்ஸ் நினைதேன். ஆனால் பிறகுதான் அது கேக்னு  தெரிந்து என கூறினார்.

இது மாதிரி அமேசான் டெலிவரி பாக்ஸ் வடிவில் கேக் கொடுக்க காரணம்  மேக் மனைவி எமிலி வாரத்திற்கு இரண்டு முறை அதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்து விடுவாராம். அதனால் தான் அமேசான் டெலிவரி பாக்ஸ் வடிவில் கேக் கொடுத்ததாக மேக் கூறினார்.

இந்த வித்தியாசமான கேக் கரோலினாவில் உள்ள ஸ்வீட் டிரீம் பேக்கரியில் தயாரித்து உள்ளனர்.இந்த கேக்கை பார்க்கும் போது உண்மையான அமேசான் டெலிவரி பாக்ஸில் இருப்பது போல டேப் ஒட்டி ,பார்கோடு போன்றவை இருப்பது போன்று இந்த கேக்கை செய்து உள்ளனர்.

இந்த கேக்கின் விலை 50 டாலராம். அதாவது இந்திய மதிப்பில் 3441 ரூபாய் இந்த கேக்கை பார்க்கும் போது இது உண்மையிலே கேக் தானா ?இல்லை பாக்ஸ என நாமளும் யோசிக்கும் அளவிற்கு உள்ள அந்த கேக் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube