முதல்வரை சந்தித்த மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி..! என்ன காரணம் தெரியுமா..?

முதல்வரை சந்தித்த மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி, நடிகர் விவேக்கின் வீடு அமைந்துள்ள சாலைக்கு, விவேக்கின் பெயரை சூட்டுமாறு கோரிக்கை கடிதத்தை அளித்துள்ளார். 

பிரபல நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் அவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன் காலமானார். இவர் சினிமா துறையில் மட்டுமல்லாது, சமுதாய ரீதியான சில விஷயங்களிலும் ஈடுபாடுடன் செயல்பட்டு வந்தார். இவரது மரணம், தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மறைந்த நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் மேவி அருட்செல்வி, முதல்வர் மு.க.ஸ்டாலினை அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, நடிகர் விவேக்கின் வீடு அமைந்துள்ள சாலைக்கு, விவேக்கின் பெயரை சூட்டுமாறு கோரிக்கை கடிதத்தை அளித்துள்ளார்.