சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அடித்தது 8/0; ஆனால் கிடைத்தது 7/0.. காரணம் இதுதான்!

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 8 ரன்கள் அடித்தது. ஆனால் 7 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதற்கு Short Run-னே காரணம் என்று விளக்கமளிக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 20-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு டெல்லி அணி 159 ரன்கள் எடுத்தது.

அதனைதொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. இறுதிவரை போராடிய ஹைதராபாத் அணி, 159 ரன்கள் எடுத்து போட்டியை சமன் செய்தது. இதனால் சூப்பர் ஓவர் நடந்தது. இந்த சூப்பர் ஓவரில் டெல்லி அணியின் அதிரடி பந்துவீச்சாளர் அக்சர் படேல் பந்து வீசினார். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 8 ரன்கள் அடித்தது. ஆனால் 7 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதுகுறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பங்கள் எழுந்தது.

அதற்கு காரணம் “Short Run”. இந்த சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனது முதல் ரன்னை ஒழுங்காக எடுக்கவில்லை. அதாவது, கிரிஸ் லைனில் தனது பேட்டைவைத்துள்ளார். கிரிஸ் லைனை பேட் அல்லது கால் கடந்தால் மட்டுமே ரன் வழங்கப்படும். இதனை 3-ம் அம்பையர் பல ரீ-பிலேகளுக்கு பின் உறுதியாக கூறினார்கள். இதனால் ஹைதராபாத் அணியில் ஸ்கொர் 7/0 என்று குறைந்தது.