பி.எம்.கேர்ஸ் நிதியை ஏன் இலவசமாக கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்த முடியாது? – மம்தா பானர்ஜி

பி.எம். கேர்ஸ் நிதியை ஏன் இலவசமாக கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்த முடியாது? என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசின் மொத்த தவறான நிர்வாகத்தின் காரணமாக நாடு குழப்பத்தில் உள்ளது. கொரோனா முடிந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் கூறியிருந்த நிலையில், அவர் இதில் கவனம் செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தை கைப்பற்றும் முயற்சியில், பாஜகவினர் முழு நாட்டையும் குழப்பத்தில் தள்ளியுள்ளனர் என விமர்சித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் உலகளாவிய விலை நிர்ணயம் குறித்த தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி, தடுப்பூசிக்கு ஒரு நிலையான விலையை நிர்ணயிக்க நாங்கள் விரும்புகிறோம்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா சமீபத்தில் தனது கோரோனா தடுப்பூசி கோவிஷீல்ட் மாநில அரசுகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.600 என விலை அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதற்காக ஏன் PM CARES நிதியை பயன்படுத்த முடியாது? என்று கேள்வி எழுப்பி, நாட்டில் பல பகுதிகளில் ஆக்ஸிஜன் மற்றும் தேவையான மருந்துகள் எதுவும் இல்லை. இந்தியாவில் மருத்துவ பற்றாக்குறை இருந்தாலும், மத்திய அரசு தொடர்ந்து மற்ற நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்கிறது என குற்றசாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தை தடை செய்வதற்கான தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொண்ட மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் பாஜகவின் உத்தரவின் பேரில் செயல்படுகிறது என்றும் பாஜகவுக்கு உதவுவதைத் தவிர எட்டு கட்டங்களில் தேர்தல்களை நடத்த எந்த காரணமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்