வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள ஏன் தடை விதிக்க கூடாது?

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள ஏன் தடை விதிக்க கூடாது? என மனுதாரர் கோரிக்கை வைத்தனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் அரசியல் லாபத்துக்காக இயற்றப்பட்டதாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது.  சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக  தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் நடைபெற்றது.  சஞ்சீப் பானர்ஜி அமர்வில் இருந்த நீதிபதி ஆதிகேசவலு விலகியதால் இந்த வழக்கு எம்.எம் சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள ஏன் தடை விதிக்கக்கூடாது..? வழக்கு நிலுவையில் உள்ளபோதே நியமனங்கள் நடைபெறுவதால் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக நாளை முடிவெடுக்கப்படும்.  இறுதி விசாரணைக்கான தேதியை நாளை முடிவு செய்வதாக நீதிபதிகள் சுந்தரேஷ், கண்ணம்மாள் தகவல் தெரிவித்தனர். மேலும், வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாளை தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
murugan