ஸ்டான் சுவாமிக்கு மும்பை ஐகோர்ட் ஏன் ஜாமீன் தரவில்லை..? – ப.சிதம்பரம்

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 84 வயது ஸ்டான் சாமிக்கு மும்பை ஐகோர்ட் ஏன் ஜாமீன் தரவில்லை?

திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டான் சுவாமி (84), எல்கர் பரிஷத் வழக்கில், கடந்த 2020-ஆம் ஆண்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு ஜாமின் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பழங்குடியினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஸ்டான் சுவாமிக்கு  உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்ட நிலையில், இவருக்கு மும்பையிலுள்ள ஹோலி ஃபேமிலி என்ற மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த  நிலையில், அவர் காலமானார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 84 வயது ஸ்டான் சாமிக்கு மும்பை ஐகோர்ட் ஏன் ஜாமீன் தரவில்லை என கேள்வி எலிப்பியுள்ளார். மேலும், நீதிமன்றம் காரணங்களை வெளியிட்டால் மற்ற சிறை கைதிகளுக்கும் உதவியாக இருக்கும்.’  என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.