தமிழக அரசு விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுப்பது ஏன்? தமிழக பாஜக தலைவர்

டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி தந்த தமிழக அரசு விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுப்பது ஏன்? என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில்  இன்று மீண்டும் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.மேலும்  விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க கூடாது, ஊர்வலம் கூடாது என்ற தமிழக அரசின் தடை உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும் .பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவே அனுமதி கோருகிறோம்,ஊர்வலத்திற்கு அல்ல.  டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி தந்த தமிழக அரசு விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.