நடிகை பிரியா பவானி சங்கர் ராஜ்வேல் ராஜேஷ் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இதனை பிரியா பவானி ஷங்கரே பல பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்ததும் உண்டு. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட புதியதாக வீடு கட்டிக்கொண்டு அதற்கான புகைப்படத்தையும், தனது காதலருடைய புகைப்படத்தையும் வெளியீட்டு இருந்தார்.

இந்நிலையில், பொதுவாவாக சினிமாத்துறையில் இருக்கும் சில நடிகைகள் தங்களுடைய காதலர்களை பற்றி கூறமாட்டார்கள். ஆனால் பிரியா பவானி ஷங்கர் அதனை ரகசியமாக வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாகவே கூறியுள்ளார். அதற்கு என்ன காரணம் என்பதை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” காதல் உறவை எதற்காக மறைக்கவேண்டும். நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த சமயத்தில் இருந்து காதலிக்கிறேன். இங்க யாரும் காதலிக்காமல் இல்லை. காதல் என்பது யாரும் பண்ணகூடாத விஷயமா..? இங்கு எல்லாரும் காதல் செய்கிறார்கள்.

4-ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு கூட ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் ஒன்னும் திடீர் என்று புகைப்படங்களை வெளியிடவில்லை. ஏன்னுடைய வேலை இப்போது மாறிவிட்டது. அதனால் நான் புகைப்படங்களை வெளியிடமாட்டேன் என அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து காதல் செய்கிறேன். அது அப்படியே தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒன்னும் தப்பு இல்லை” என அதிரடியாக கூறியுள்ளார்.