இவர்காளுக்கெல்லாம் ஏன் உதவி செய்ய வேண்டும்! - நடிகர் ராகவா லாரன்ஸ் ட்வீட்

தமிழக மது கடைகளில் இருக்கும் கூட்டத்தை பார்த்து, நாம் ஏன் உதவி செய்ய வேண்டும்

By leena | Published: May 21, 2020 08:00 AM

தமிழக மது கடைகளில் இருக்கும் கூட்டத்தை பார்த்து, நாம் ஏன் உதவி செய்ய வேண்டும் என்று என் தாய் உட்பட பலர் கேட்கின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80-கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் இதுகுறித்து தனது ட்வீட்டர் பாக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில், 'தமிழக மது கடைகளில் இருக்கும் கூட்டத்தை பார்த்து, நாம் ஏன் உதவி செய்ய வேண்டும் என்று என் தாய் உட்பட பலர் கேட்கின்றனர். ஒருவர் குடிப்பதனால் அவர் குடும்பம் கஷ்டப்படுகிறது. மேலும், பலர் குடிப்பழக்கம் இல்லாமல் வறுமையால் கஷ்டப்படுகின்றனர். அதனால், தொடர்ந்து உதவி செய்வோம் என தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc