பேனர் விவகாரத்திற்கு நீதிமன்றம் சென்ற தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் செல்லவில்லை ? ஸ்டாலின்

பேனர் விவகாரத்திற்கு நீதிமன்றம் சென்ற தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் செல்லவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.இதன் பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சலை மர்ம காய்ச்சல் என்று அரசு கூறி வருகிறது.இதுவரை 31 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் குதர்க்கமாக பேசியது கண்டிக்கத்தக்கது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பை மர்ம காய்ச்சல் என தமிழக அரசு தவறாக பிரசாரம் செய்கிறது. பேனர் விவகாரத்திற்கு நீதிமன்றம் சென்ற தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் செல்லவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.