மது யாருடைய அத்தியாவசிய தேவை ? அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி

மது யாருடைய அத்தியாவசிய தேவை ? அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி

மது யாருடைய அத்தியாவசிய தேவை  என்று கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் டாஸ்மாஸ் கடைகளை  நாளை முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை  தவிர பிற இடங்களில் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,  அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வாங்க வெளியில் வர வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ,எதன் அடிப்படையில் மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு முடிவு செய்கிறது.மது யாருடைய அத்தியாவசிய தேவை ?அந்த வருமானத்தை நம்பி இருக்கும் அரசுக்கா? அல்லது தங்கள் சாராய ஆலைகளின் விற்பனை குறைந்ததை குறித்து கவலையில் உள்ள ஆண்ட ,ஆளும் கட்சியினருக்கா? 40 நாட்களாக தொழில் இல்லாமல்,வருமானமின்றி தவிக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துங்கள் என்ற பலரது கோரிக்கைகளை கேட்கும் திறன் இல்லாத அரசுக்கும்,இந்த வியாபாரத்தால் கொள்ளை லாபம் அடிப்பவர்களுக்கு மட்டுமே மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரிந்திருக்கக்கூடும்.

அண்டை மாநிலங்களில் விற்பனை உள்ளது, என்பது பதிலாக இருந்தால் அவர்கள் பரிசோதிக்கும் வேகம்,எளிய மக்களுக்கு அரசின் உதவிகள் சென்றடைய அரசின் திட்டம் மற்றும் நடவடிக்கைகள் என்று பல காரணிகள் உள்ளது.படிப்படியாக மது விலக்கு என்று சத்தியம் செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய அரசு இது.எவரின் வழிகாட்டுதலின்படி இந்த ஆட்சி நடக்கிறது என்று  சொல்லப்படுகிறதோ அவர் 500 மதுக்கடைகளை மூடி தனது 3 வது பதவிக்காலத்தை தொடங்கினார் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வலியுறுத்துகிறது மக்கள் நீதி மய்யம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Join our channel google news Youtube