10.3 C
London
Sunday, October 17, 2021

இறுதிப்போட்டியில் சென்னையுடன் மோதப்போவது யார்..? கொல்கத்தா – டெல்லி இன்று பலப்பரீட்சை..!

இன்று 2-வதுதகுதிச் சுற்று போட்டியில் கொல்கத்தா – டெல்லி அணிகள் மோதுகிறது.

பிளே ஆஃப் முதல் தகுதி போட்டியில் சென்னை அணி டெல்லி வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று 2-வதுதகுதிச் சுற்று போட்டியில் கொல்கத்தா – டெல்லி அணிகள் மோதுகிறது. இருஅணிகளும் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் டெல்லி 12 போட்டிகளிலும், கொல்கத்தா 15 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளும் கடைசியாக ஷார்ஜாவில் மோதிய போது கொல்கத்தா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய போட்டியும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இறுதிச் சுற்றில் சென்னை அணியை எதிர்கொள்ளும்.

spot_imgspot_img

Hot Topics

Read More