20 லட்சம் பேர் வரை உயிரிழப்பதை தடுக்க முடியாது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தடுப்பூசி பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை எட்டக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசர கால மருத்துவ நிபுணர் மைக் ரியான் கூறுகையில் , சர்வதேச நடவடிக்கை இல்லாமல் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனாவால் இதுவரை ஒரு மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பியாவில் மீண்டும்  கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது.சோதனை , தனிமைப்படுத்தல்,  சமூக இடைவெளி ,முகக்கவசம்  அணிவது, கை கழுவுதல் போன்ற அனைத்து மாற்று வழிகளும் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்றும்  கேள்வி எழுப்பினார்.மேலும் பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது.

கொரோனாவால் அமெரிக்கா,இந்தியா,பிரேசில் ஆகிய நாடுகளில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனாவிற்கான  சிகிச்சை மேம்பட்டு உள்ளதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளது. ஆனால்  தடுப்பூசி பரவலாக இருந்தாலும் 20 லட்சம் (2 மில்லியன் ) பேர் வரை உயிரிழப்பதை தடுக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.