இவர்களுக்கெல்லாம் கொரோன பரிசோதனை கட்டாயம்.! – தமிழக அரசு.!

தமிழகத்திற்குள் பயணித்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை – தமிழக அரசு 

மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற பிற மாநிலங்களில் இருந்து ரயிலில் தமிழகம் வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வந்தாலே அறிகுறி இல்லாதவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்திற்குள் பயணித்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து பிற மண்டலங்களுக்கு செல்லும் நபர்களுக்கு அறிகுறி இல்லாதவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும். அதுபோல சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம். கொரோனா சோதனை முடிவில் பாசிட்டிவ் என்று தெரிந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். நெகட்டிவ் என்று தெரிந்தால் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அலுவல் ரீதியாக பயணம் மேற்கொண்டு 3 நாட்களில் திரும்பி வந்தால் தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை.

மேலும், ஒரு மண்டலங்களுக்குள் வாகனங்களில் பயணிக்க இ- பாஸ் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஒரு மண்டலத்தில் இருந்து மற்றோரு மண்டலத்துக்கு செல்வதற்கு இ- பாஸ் அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுபோன்று ஒரு மண்டலத்தில் இருந்து மற்றோரு மண்டலத்தில் உள்ள மாவட்டத்திற்கு செல்ல இ- பாஸ் அவசியம் தேவை என்றும் மண்டலங்களுக்குள் இடையே பயணிப்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்