கொரோனா வைரஸ் பற்றி ஆராய WHO ஆராய்ச்சி குழு சீனாவிற்கு விரைந்தது.!

கொரோனா வைரஸின் பரவல் குறித்து ஆராய சர்வதேச சுகாதார அமைப்பான WHO அமைப்பில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு சீனா சென்றுள்ளது.

கடந்த வருடம் சீனாவில் உள்ள வுகாண் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து மனிதர்களுக்கு பரவிய கொடிய வைரஸான கொரோனா தற்போது உலகம் முழுக்க பரவி பொதுமக்களின் இயல்பு வாழக்கையை வெகுவாக பாதித்து வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸின் பரவல் குறித்து ஆராய சர்வதேச சுகாதார அமைப்பான WHO அமைப்பில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு சீனா சென்றுள்ளது.

இந்த குழுவில் விலங்குகள் நல ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர் அவர்கள், வுகாண் நகரில் உள்ள இறைச்சிக்கடையில் எவ்வாறு இறைச்சி மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியது என ஆராய உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.