முத்து திரைப்படத்தில் சரத்பாபு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

முத்து திரைப்படத்தில் சரத்பாபு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

,இந்த திரைப்படத்தில் ரஜினியை கன்னத்தில் அடிப்பது போன்ற காட்சியில் ஜெயராமன் நடிக்க வேண்டியிருந்தது

தமிழ் சினிமாவில் உச்சநட்ச்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தர்பார் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் ஒரு நல்ல வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது என்றே கூறலாம், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த 1995ம் ஆண்டு இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் முத்து இந்த படம் மக்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது என்றே கூறலாம், இந்த படத்தில் நடிகர் சரத்பாபு நடித்த கதாபாத்திரத்தில் முதலில் மலையாள நடிகர் ஜெயராம் அவர்களிடம் தான் முதலில் கேஎஸ் ரவிக்குமார் கூறினாராம் ஆனால் அந்த படத்தில் ஜெயராமன் நடிக்க மறுத்தார். 

மேலும் தற்பொழுது அந்த படத்தில் என் நடிக்க மறுத்தார் என்பதை கூறியுள்ளார்,இந்த திரைப்படத்தில் ரஜினியை கன்னத்தில் அடிப்பது போன்ற காட்சியில் ஜெயராமன் நடிக்க வேண்டியிருந்தது. அதனால் தான் அந்த படத்தை வேண்டாம் என கூறிவிட்டேன் என தெரிவித்துள்ளார். 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube