வேதாளம் ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா..?

வேதாளம் ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா..?

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ஆச்சார்யா. இந்த படத்தை ராம் சரண் தயாரித்து கொரட்டால சிவா இயக்குகிறார். மேலும் சிரஞ்சீவி இந்த படத்தில் இரண்டு அவதாரங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் மேலும் இவர் மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார். தற்போது அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube