புதிய டைட்டில் ஸ்பான்சர் யார்..? பிசிசிஐ முக்கிய அறிவிப்பு.!

இந்திய, சீன எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில் சீன பொருள்களை தடைசெய்ய வேண்டும் குரல் ஒங்க தொடங்கியது. இதனால், பாதுகாப்பு கருதி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட  ஊரடங்கு காரணமாக ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது.

சீனாவை தளமாகக் கொண்ட விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ .2,199 கோடிக்கு ஐந்தாண்டு ஒப்பந்தம் செய்தது. இதனால், இந்த ஐபிஎல் போட்டியில் விவோ ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்யவேண்டும் என பலர் கூறினார்.

சமீபத்தில், ஐபிஎல் நிர்வாக கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், விவோ ஸ்பான்சர்ஷிப்பை தற்காலிகமாக பிசிசிஐ நிறுத்தி வைக்க முடிவு செய்தது. இந்நிலையில், ஐபிஎல்-க்கான  புதிய ஸ்பான்சருக்கான டெண்டர் அழைப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பிசிசிஐ ) அறிவித்துள்ளது.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆர்வமுள்ளவர்கள் ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான 13 அம்ச விதிமுறையை அறிவித்தார். மேலும், ஆகஸ்ட் 18 அன்று  புதிய டைட்டில் ஸ்பான்சர் யார் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 14 ஆகும்.  ஆர்வமுள்ளவர்களின் வருவாய் 300 கோடி ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதற்கான உரிமைகள் ஆகஸ்ட் 18, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
murugan