காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் யார்..? ஆலோசனை..!

தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்ய சென்னையில் மீண்டும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்ய சென்னையில் மீண்டும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ், மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது.

18 எம்எல்ஏக்களின் கருத்து கேட்டு அதை சோனியா காந்திக்கு அனுப்பி வைக்க தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்புக்கு விஜயதரணி, செல்வபெருந்தகை உள்ளிட்டோர் இடையே போட்டி நிலவுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள், பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்டக் கட்சிகள் ஏற்கனவே சட்டமன்றக் குழு தலைவரைத் தேர்வு செய்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இழுபறி நீடித்து வருகிறது.

author avatar
murugan