உலக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உலக சுகாதார நிறுவன தினம் குறித்த சிறப்பு தொகுப்பு....

உலகில் உள்ள அனைத்து மக்களின் வாழ்வையும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும்

By kaliraj | Published: Apr 06, 2020 11:15 AM

உலகில் உள்ள அனைத்து மக்களின் வாழ்வையும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் முக்கிய காரணியாக கருதுவது உலக சுகாதார நிறுவனம் ஆகும். இது  உலகில்  உள்ள அனைவருக்கும் இயன்றவரை சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இந்நிறுவனம் உலகின்  பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரமும் முக்கிய நோக்கமும்  படைத்தது. இந்த நிறுவனம் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின்  தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் தொற்றுநோய்கள் போன்ற நோய் நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும். இந்நிறுவனம் காசநோய், தட்டம்மை, போலியோ ஆகிய நோய்களை கட்டுப்படுத்துவதில் மேற்கொண்ட நடவடிக்கைகளை அனைவர்ம் அறிந்ததே.  ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதியை உலக சுகாதார தினமாக கொண்டாடுகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc