யார் சொல்லிக் கொடுத்ததை பேசுகிறீர்கள்? விவசாயிகளுக்கு ஆதரவாக சித்தார்த்!

விவசாயிகளின் போராட்டம் குறித்து வெளிநாட்டவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என டுவிட்டரில் பதிவு செய்யும் பிரபலங்களுக்கு, சித்தார்த் யார் சொல்லிக் கொடுத்ததை பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டில் உள்ள பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு வெளியுறவு துறை சார்பில் கடுமையான கண்டனமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சில கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் உள்நாட்டு பிரச்சினைகளை பார்த்துக் கொள்வதாகவும், வெளிநாட்டவர்கள் தலையிட வேண்டாம் என்பது போலும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இதனையடுத்து தற்போது சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உங்களது கதாநாயகர்களை கவனமாக தேர்ந்தெடுங்கள் எனவும், கல்வி, நேர்மை, சக மனிதர்கள் மீதான அன்பு, கொஞ்சம் முதுகெலும்பு ஆகியவை இருந்திருந்தால் இந்த நாளை காப்பாற்றி இருக்கலாம் எனவும், யாரோ ஒருவர் சொல்லிக் கொடுப்பதை ஒருமித்த குரலில் கூறுவதுதான் பிரச்சாரம், அப்படி யார் சொல்லிக் கொடுத்ததை நீங்கள் கூறுகிறீர்கள் என சித்தார்த் பிரபலங்களுக்கு கேள்வி எழுப்பி,  விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு உள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் ஏற்படக்கூடிய மனித உரிமை மீறல்கள் ஒருபோதும் உள்நாட்டு விஷயமாக இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதோ அவரின் பதிவுகள்,

Rebekal

Recent Posts

சுதந்திரம் தான் முக்கிய காரணம் ..! போட்டிக்கு பின் கம்மின்ஸ் கொடுத்த ஸ்டேட்மென்ட்!!

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி, பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17-…

12 mins ago

கோட் படத்தில் விஜயகாந்த்! உண்மையை உடைத்த பிரேமலதா!

Vijayakanth : கோட் படத்தில் விஜய்காந்த்  AI மூலம் வரவுள்ளதாக அவருடைய மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் AI மூலம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்…

12 mins ago

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை !! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ !!

Gold Price: சென்னையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

29 mins ago

பாஜக ஏன் வரவே கூடாது? – முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

MK Stalin: பாஜகவையும், அதிமுகவையும் புறக்கணிப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் இன்னும் 3 தினங்களில் நடைபெற…

1 hour ago

2-வது தோல்வியை சந்திக்க போகும் அணி எது ..? கொல்கத்தா – ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின்-17வது சீசனின் இன்றைய போட்டியில் கொல்கத்தா…

1 hour ago

கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ஐபிஎல்2024:பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய…

12 hours ago