கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவும்.! ஒப்புக்கொண்ட WHO.!

கொரோனா மக்கள் மத்தியில் எவ்வாறு பரவுகிறது என்பதற்கான  தெரிவிக்க

By murugan | Published: Jul 08, 2020 11:55 AM

கொரோனா மக்கள் மத்தியில் எவ்வாறு பரவுகிறது என்பதற்கான  தெரிவிக்க உலக சுகாதார அமைப்பு  உலக விஞ்ஞானிகள் அடங்கிய குழு வலியுறுத்தியதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா காற்று வழியாக வாய்ப்புள்ளது என்பதை ஒப்புக் கொண்டது.

உலக சுகாதார அமைப்புன் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான தொழில்நுட்ப நிபுணர் மரியா நேற்று செய்தியாளர் கூட்டத்தில், WHO தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர்கள், கொரோனா வைரஸ் எவ்வாறு காற்றில் பரவுகிறது, எப்படி என்பது குறித்து பல வாரங்களாக நாங்கள் ஏராளமான (அறிவியல்) குழுக்களுடன் ஈடுபட்டுள்ளோம் என  மரியா வான் கெர்கோவ் கூறினார்.

இந்நிலையில், 32 நாடுகளை சார்ந்த 200 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தைத் தொடர்ந்து, WHO கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடும் என தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் பரவும் 19 முறைகளில் ஒன்றாக காற்று மற்றும் ஏரோசல் பரவுதல் பற்றி நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என கூறினார்.

எதிர்காலத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாங்கள் ஒரு நாளைக்கு 100,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதை கண்டோம் என்று டாக்டர் மைக்கேல் ரியான் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஆனால், இன்று நாங்கள் ஒரு நாளைக்கு 200,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதை காண்கிறோம் என கூறினார். இறப்புகளின் எண்ணிக்கை இப்போதைக்கு நிலையானதாகத் தோன்றியது என்று ரியான் கூறினார்.

Step2: Place in ads Display sections

unicc