விழா மேடையில் ஈபிஎஸ் அமர்ந்துள்ள நிலையில், மேடைக்கு வராத ஓபிஎஸ்..!

நிகழ்ச்சி நடைபெறும் ஓட்டலில் தனி அறையில் உள்ள ஓபிஎஸ் மேடைக்கு வரவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரௌபதி முர்மு ஆதரவு கோருகிறார். முர்முவை சந்திக்க அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனி அறைகளில் காத்திருந்தனர்.

இந்த நிலையில், சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். திரெளபதி முர்முவை தனித் தனியாக சந்தித்து அதிமுக சார்பில் ஆதரவு அளித்துள்ளார். பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு அதிமுக முழு ஆதரவைத்தருவதாக  தெரிவித்துள்ளார்.

விழா மேடையில் ஈபிஎஸ் அமர்ந்துள்ள நிலையில், ஓபிஎஸ் மேடைக்கு வரவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் ஓட்டலில் தனி அறையில் உள்ள ஓபிஎஸ் மேடைக்கு வரவில்லை. மேடையில் ஈபிஎஸ், எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.