அரசு இனியும் காலதாமதம் செய்வதோ; அலட்சியம் காட்டுவதோ கூடாது - தினகரன்

அரசு இனியும் காலதாமதம் செய்வதோ; அலட்சியம் காட்டுவதோ கூடாது - தினகரன்

மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போதுள்ள இ- பாஸ் நடைமுறையால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் தினகரன்,கல்லூரி சேர்க்கை தொடர்பான பணிகளுக்காக தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கும், சென்னைக்கு வருவதற்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போதுள்ள இ- பாஸ் நடைமுறையால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள்.

 இதற்காக இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த பலரின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால்,அவர்கள் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே,மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை காட்டினாலே போதும்; மாணவருக்கும், அவருடன் வருபவருக்கும் இ-பாஸ் தேவையில்லை என முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக அறிவிக்க வேண்டும்.மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய பிரச்னையில் அரசு இனியும் காலதாமதம் செய்வதோ; அலட்சியம் காட்டுவதோ கூடாது என்று பதிவிட்டுள்ளார்.