பிரதமர் பொதுநிவராண நிதி எங்கே? – முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி!

புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை என மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசிய போது, பிரதமர் பொதுநிவராண நிதி குறித்து கேள்விகளை எழுப்பியதோடு, பிஎம் கேர்ஸ் நிதி எங்கே போனது என்றும் கேட்டுள்ளார். இலவச தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் மோடியிடமிருந்து தனக்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கும், சிலைகளை உருவாக்குவதற்கு 20,000 கோடி ரூபாய் செலவிடுகிறார்கள், ஆனால், தடுப்பூசிகளுக்கு ரூ.30,000 கோடி ஏன் நிதி ஒதுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்