துபாய் இளவரசி லத்தீபா எங்கே..? நண்பருடன் இருக்கும் புகைப்படங்கள் உண்மையா.?

தந்தையால் 3 வருடம் சிறையில் வைக்கப்பட்டவர் தற்போது நண்பர்களுடன் உள்ளாரா உண்மையை மறைக்கிறதா துபாய் அரசு

துபாய் மன்னரின் மகள் இளவரசி லதிபா அமெரிக்காவில் சுதந்திரமான வாழ்க்கை வாழ தனது நாட்டிலிருந்து தப்பித்ததற்காக அவரது தந்தை ஷேக் முகமது அல் ஆல் சிறை பிடிக்கப்பட்டார்.

லதிபா அல் மக்தூம் ஆயுதம் ஏந்திய காவலரின் பாதுகாப்பில் தனது “வீட்டு சிறையில்” இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் லத்தீபா தனது வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், அதன்பின் அவர் சிறையிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தனது நண்பர்களுடன் புதிதாக தனது வாழ்க்கையை தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது நெருங்கிய நண்பரான முன்னாள் ராயல் கடற்படை அதிகாரி சியோனட் டெய்லர், லத்தீபா தனது நண்பருடன் இருக்கும் 2 புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அது சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்து, ஆனால் அதில் உள்ள ஒரு புகைப்படம் துபாயில் உள்ள ஒரு மாலில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் மற்றொன்று இத்தாலிய உணவகம் பைஸ் மாராவில் எடுக்கப்பட்டதாக உள்ளது.

மேலும் படங்களில் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், மே 13 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளியான ‘டெமோன் ஸ்லேயர்: முகன் ட்ரெயின்’ படத்திற்கான விளம்பரத்தினை புகைப்பட பின்னனி காட்டுகிறது.