நகைக்கடன் எப்போது ரத்து செய்யப்படும்….? அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்…!

நகை கடன் ரத்து தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி வழங்கிய பின், அரசாணை வெளியிடப்படும்

அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், நகை கடன் ரத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ஏன் இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், தடுமாறி அதற்குரிய ஆணை முதலமைச்சர் ஆன பின் வெளியிடுவார் என கூறினார். அதற்கு செய்தியாளர்கள், முதலமைச்சர் ஆனால் தான் நகை கடன் ரத்துக்கு அரசாணை வெளியிடப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், அ நகை கடன் ரத்து தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி வழங்கிய பின், அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.