கொரோனா தடுப்பூசி எப்போது விநியோகத்திற்கு வரும் – உலக சுகாதார அமைப்பு

முதலில் சீனாவில்  கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், இந்த வைரஸை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உலக நாடுகள் முழுவதும் தடுப்பூசியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனையடுத்து, கொரோனா தடுப்பூசி எப்போது என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ‘கொரோனா தடுப்பூசி தயாரான உடன் அவை அனைவருக்கும் சமமான விகிதத்தில் விநியோகம் செய்ய  உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி நிச்சயம் தேவைப்படுகிறது என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது.’ என்றும் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.